ADDED : ஏப் 13, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பட்டியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. முத்துசாரதா தலைமை வகித்தார்.
சார்பு நீதிபதி டி. திரிவேணி, மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி, வட்டாரக்கல்வி அலுவலர் முருகேசன், ஜெபசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்றனர்.
வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களை வரவேற்று பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் ஜெபசுதா நன்றி கூறினார்.