/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 25, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.573 கோடியை தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கூடாது. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசும கவர்னர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஷ்வபாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.