ADDED : பிப் 09, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி அசோக் நகரிலுள்ள லேந்தர் தொண்டு நிறுவனத்தின் அறிவுசார் குறைபாடு குழந்தைகள் பள்ளியில் ஜி.டி.என்.கல்லுாரி சுயநிதிப்பிரிவு ஆங்கில துறையின் உதவி பேராசிரியர்கள் இளங்கலை மூன்றாமாண்டு முதுகலை மாணவர்கள் சேவை பணியில் ஈடுபட்டனர்.
உரிமையாளர் காளீஸ்வரன் மாணவர்களை வரவேற்றார். குழந்தைகளுக்கான சிற்றுண்டி, உணவு, கலைநிகழ்ச்சிகள், துாய்மை பராமரிப்பு பணிகள் செய்தனர்.
உதவி பேராசிரியர்கள் ரேகா, விபின்பிரபு, திருநாவுக்கரசு, அகிலாபாய், தீபிகா பங்கேற்றனர். கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம், முதல்வர் பாலகுருசாமி துணை முதல்வர் நடராஜன் மாணவர்களை வாழ்த்தினர். துறை தலைவர் ஆனந்தபாபு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.

