தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர் உடல் உறுப்பு தானம்

 மாணவர் உடல் உறுப்பு தானம்

 மாணவர் உடல் உறுப்பு தானம்


ADDED : ஜன 28, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆர்.டி.ஓ., மலர் அஞ்சலி

குஜிலியம்பாறை: மூளைச்சாவு மாணவர்உடல் உறுப்புக்கள் தானம் செய்ய அவரது உடலுக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது.

கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி விவசாயி சக்திவேல் மகன் இந்திரகுமார் 15. கரூர் மாவட்டம் ஈசநத்தம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து ஈசநத்தம் நோக்கி டூவீலரில் சென்றார்.

தனியார் திருமண மண்டபம் அடுத்து சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்தார். உடனடியாக அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டன.

இதை தொடர்ந்து அவரது உடல் கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி மயான கரைக்கு கொண்டுவரப்பட்டது. ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் ரவிக்குமார், வி.ஏ.ஓ., அருண் கார்த்திக்மலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us