/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயோ-மேக்ஸ் பாடப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்
/
பயோ-மேக்ஸ் பாடப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்
பயோ-மேக்ஸ் பாடப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்
பயோ-மேக்ஸ் பாடப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்
ADDED : மே 09, 2025 05:38 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.ஹரிஹரன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பயோமேக்ஸ் பாடப்பிரிவில் 600க்கு 596 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவன் எஸ்.ஹரிஹரன் மாணவனின் தாய் நதியா ஒட்டன்சத்திரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஹரிஹரன் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் இப்பள்ளியின் உதவித்தொகை கிடைக்கப்பெற்று படித்துள்ளார்.
தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, வேதியியலில் 99, இயற்பியல், கணிதம், உயிரியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணுடன் 600க்கு 596 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில்உள்ள பள்ளிகளில் பயோ மேக்ஸ் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் திருப்பதி, செயலர்கள் மீனா, சுரேஷ், கண்ணன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவன் ஹரிஹரன் கூறியதாவது:
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. கால்நடை மருத்துவம் படித்து கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.