/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு
/
மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : மார் 18, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : -கோபால்பட்டி கே.அய்யாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம் பெற்றோரை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வின்சென்ட் பால்ராஜ்,ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்தித்து அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக நடந்தது. துணைத் தலைவர் ராசு பங்கேற்றனர்.

