/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு
/
பஸ் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு
ADDED : டிச 26, 2024 05:15 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டிலிருந்து நடகோட்டைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
காலை,மாலை 2 நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.
இதன் மூலம் செக்காபட்டி, கண்ணாபட்டி, கரட்டுப்பட்டி, விருவீடு, செம்மார்பட்டி, வத்தல் பட்டி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பகுதிகளில் உள்ளஅரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இலவச பஸ் பாஸ் மூலம் பயனடைந்தனர்.
சில மாதங்களாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.
வத்தலக்குண்டு அரசு பணிமனை அதிகாரிகளிடம் கேட்டால் பழுதடைந்து விட்டது.டிரைவர், கண்டக்டர் இல்லை எனக் காரணம் சொல்லி காலம்தாழ்த்துகின்றனர்.
ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் கூறியதாவது: நடகோட்டைக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் ரோட்டோர முட்புதர்களால் பாதிப்படைகின்றனர்.
போக்குவரத்து அதிகாரிகள் காலை, மாலையில் செல்லும் அரசு டவுன் பஸ்சை முறையாக இயக்க வேண்டும்.

