ADDED : அக் 16, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்டத்தில் உள்ள 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 4152 மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்து செல்லத்திட்டமிட்டது.
முதல் கட்டமாக நேற்று திண்டுக்கல் பழநி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, கச்சேரி தெரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 286 மாணவர்கள் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். இதை கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி, அண்ணா பொறியியல் கல்லுாரி, ரெட்டியார்சத்திரம் ஜி.டி.என் கலைக் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.