தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான ரோடால் மாணவர்கள் தவிப்பு

சேதமான ரோடால் மாணவர்கள் தவிப்பு

சேதமான ரோடால் மாணவர்கள் தவிப்பு


ADDED : செப் 15, 2026 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 03:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை, செப்.16

வளவிசெட்டியபட்டி பள்ளி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

வடமதுரை ஒன்றியம் வளவிசெட்டியபட்டியில் இருந்து பாலமடைப்பட்டி, பாலம்பூசாரியூர், நடுவனுார், மலைப்பட்டி, ராஜபுரம் வழியே வேடசந்துார் ஒன்றியம் ஒத்தக்கடை வரை ரோடு செல்கிறது.

மொத்தம் 11 கி.மீ., துாரமுள்ள இப்பாதையின் பெரும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 4 ஊராட்சி மக்கள் கப்பி ரோட்டை தார் ரோடாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். தினமலர் நாளிதழும் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் பலனாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை மூலம் தார் ரோடாக மாறியது.

வளவிசெட்டியபட்டி துவங்கி மேல்நிலைப்பள்ளி வரை ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி முறையாக செய்யப்படாததால் மழைநீர் பாய்ந்து ரோடு சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். ரோடு சீரமைப்புக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us