/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி
/
நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி
நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி
நிச்சயமற்ற அரசு பஸ்கள் சேவையால் பாதிப்பு செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் மாணவர்கள் அவதி
ADDED : மார் 03, 2024 06:25 AM

கன்னிவாடி: செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளுக்கான பஸ்கள், பள்ளி நேரங்களில் அரசு பஸ்கள் அடிக்கடி டிரிப்-கட் செய்யப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தடங்களில் அரசு, தனியார் டவுன் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆத்துார், எஸ்.பாறைப்பட்டி, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி பண்ணைப்பட்டி திருமலைராயபுரம் உட்பட 10க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் இத்தடங்களில் இயங்கி வரும் அரசு பஸ்களின் சேவையை மட்டுமே நம்பியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வசதி இருந்த போதும் அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. காலை, மாலை என பள்ளி நேரங்களில் இயங்கிய பல பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து உரிய நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். புறநகர் தனியார் பஸ்களில் தொங்கியபடி அபாயப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
ஆத்துார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் கிளை 2, கிளை 3 டெப்போக்களில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் அரசு பஸ் சேவையே முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக அரசு பஸ் சேவையை நம்பி உள்ளனர். பஸ்களை இயக்குவதில் அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி டிரிப்-கட் செய்யப்படும் நிலை தொடர்கிறது. சிறப்பு பஸ்களின் வெளியூர் பயணத்திற்காக கிராமப்புற பஸ்களை மாற்றி அனுப்புகின்றனர்.அதிகாரிகள் அலட்சியம் மட்டுமின்றி ஊழியர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் மகளிர், கூலித்தொழிலாளர்கள், முதியோர் பாதி வழியில் இறக்கி விடப்படும் அவலமும் தொடர்கிறது.மாவட்ட நிர்வாகம் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி கிராமங்களுக்கான தடையற்ற சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் அவதி
ராமச்சந்திரன் ,பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், கெம்மனம்பட்டி : சில நேரங்களில் இரவு நேர கடைசி டிரிப்பில் கிராம பஸ்களை டிரைவர், கண்டக்டர்கள் விருப்பத்திற்கேற்ப பாதி துாரம் வரை மட்டுமே இயக்குவது, முழுமையாக நிறுத்தி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண் கூலித் தொழிலாளர்கள், தினமும் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் நீடிக்கிறது.
--அதிகாரிகள் அலட்சியம்
ரஜினி,சமூக ஆர்வலர், தர்மத்துப்பட்டி : பெருமளவு புறநகர் பஸ்கள் திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியே செல்கின்றன. செம்பட்டி-ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு ஏதுவாக பல அரசு பஸ் டிரிப்களை காலை, மாலை நேரங்களில் நிறுத்திவிட்டனர். மாணவர்கள் விபத்து அபாய நிலையில் சரக்கு வாகனங்கள், தனியார் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர். பள்ளி நேர பஸ்களை தடையின்றி இயக்க ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் கிளை 3 டெப்போக்களின் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு தேவை
சக்திவேல் ,ரெட்டியார்சத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர், கன்னிவாடி : கன்னிவாடியில் 5.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நவீன பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு பல மாதங்களாகிறது. போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியத்தால் பெரும்பாலான டவுன், புறநகர் பஸ்கள் இங்கு வருவதை தவிர்க்கின்றன. செம்பட்டி வழித்தடத்தில் இயங்கி வந்த 100க்கு மேற்பட்ட வெளிமாவட்ட புறநகர் பஸ்கள் திண்டுக்கல் பைபாஸ் ரோடு வழியாக செல்கின்றன. செம்பட்டி, கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட்களில் காத்திருக்கும் பயணிகள் அலைக்கழிப்பு, அவதிப்பட்டு வருகின்றனர்.

