/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிர்வுடன் வெடி சத்தம் திண்டுக்கல்லில் 'திக் திக்' கூரை பெயர்ந்து மாணவர்கள் ஓட்டம்

ADDED : பிப் 19, 2025 01:07 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சில மாத இடைவெளியில் அவ்வப்போது திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்பது தொடர்கிறது.
இந்த சத்தம் 20 முதல் 40 கி.மீ., சுற்றளவிற்கு பயங்கர அதிர்வுடன் கேட்கிறது.
இதுகுறித்து, புவியியல் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தியும், இதுவரை அறிவியல் ரீதியான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
நேற்றும் காலை, 11:14, 11:21 ஆகிய நேரங்களில் இருமுறை அதிர்வுடன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வேடசந்துார் அருகே நாகைய கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8ம் வகுப்புகள் பழமையான கட்டடத்தில் உள்ளன.
நேற்று வெடிச்சத்தத்தின் போது எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறையில் கூரை பூச்சு பெயர்ந்து வகுப்பறையில் விழுந்தது. அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
சில ஆண்டுகளாக பலத்த வெடிச்சத்தம், அதிர்வு பிரச்னை இருந்தபோதிலும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் அது குறித்து விளக்கம் ஏதும் வெளியிடவில்லை.
இதனால் வெடிச்சத்தத்திற்கான காரணம் குறித்த அச்சம் மக்களிடம் தொடர்ந்து நீடிக்கிறது.