UPDATED : அக் 13, 2026 08:42 PM
ADDED : அக் 13, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
நத்தம்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் அக்.,8,9ல் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் கோகுல் 3000 மீ., ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்ததுடன், தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றார். மாணவன் அறிவுமணி 800 மீ., ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 400 மீ., ஓட்டப்பந்தயத்தில் 2ம் இடமும் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் தட்டு எறிதல் போட்டியில் மாணவன் அகில் 2ம் இடம் பெற்றார்.
இவர்கள் மூவரும் சேலத்தில் மாநில அளவில் நடக்கும் குடியரசு தின விழா தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் பாராட்டினர்.
