UPDATED : அக் 13, 2026 09:20 PM
ADDED : அக் 13, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இளைஞர் எழுச்சி ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் பேசினார். கல்லுாரி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் சின்னைகவுண்டன்வலசில் முடிந்தது. கனவு காணுங்கள், இளைஞர்களே எழுச்சி பெறுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
