/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் வசதியின்றி மாணவர்கள் நடை கொடைக்கானல் 24 வது வார்டில் அவதி
/
பஸ் வசதியின்றி மாணவர்கள் நடை கொடைக்கானல் 24 வது வார்டில் அவதி
பஸ் வசதியின்றி மாணவர்கள் நடை கொடைக்கானல் 24 வது வார்டில் அவதி
பஸ் வசதியின்றி மாணவர்கள் நடை கொடைக்கானல் 24 வது வார்டில் அவதி
ADDED : ஜன 10, 2025 07:29 AM

கொடைக்கானல்: பஸ் வசதியின்றி மாணவர்கள் நடந்து செல்லும் நிலையில் கொடைக்கானல் நகராட்சி 24 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.
அட்டக்கடி, சகாயபுரம், இருதயபுரம், வட்டச்சோலை, கே.பி.எம்., பாறை, சத்யா நகர், கொய்யாபாறை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சேதமடைந்த மெயின் ரோடால் மக்கள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது .
குழாய் பாலங்கள் துார்ந்து கழிவுநீர் ரோட்டில் செல்லும் நிலை உள்ளது. பட்டா இல்லாத அவலம், பஸ் வசதியின்றி பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால் அவதியடைகின்றனர் . சரிவர ஏரியாத தெருவிளக்குகளால் மக்கள் பாதிக்கின்றனர்.
காட்டுமாடால் அச்சம்
ரவிசகாயநாதன், ஓய்வு அரசு ஊழியர் : வார்டில் குண்டும் குழியுமான ரோடால் நாள்தோறும் பொதுமக்கள், வாகனங்கள் தடுமாறுவதால் விபத்து அபாயம் உள்ளது.
சென்பகனுார் நுழைவுவாயில் உள்ள விநாயகர் கோயில் சந்திப்பு ரோட்டில் உள்ள பாலம் கட்டமைக்காமல் வாகன ஓட்டிகள் தடுமாற விபத்து அபாயம் உள்ளது. காட்டுமாடு நடமாட்டத்தால் அச்சுறுத்தல் உள்ளது.
நோய் தொற்று அபாயம்
ஜெயபிரகாஷ், வியாபாரி : செண்பகனுார் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் 7 குழாய் பாலங்கள் வழியாக மழை நீர் , கழிவுநீர் செல்ல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் இவை அனைத்தும் துார்ந்தும், தனியார் ஆக்கிரமிப்பு , பராமரிப்பின்றி உள்ளது. தெரு விளக்கு எரிவதில்லை. கவுன்சிலர் பாரபட்சமாக நடந்து கொள்ளும் நிலை உள்ளது. துார்வாரப்படாத சாக்கடையால் கொசுக்கள் நோய் தொற்று அபாயம் உள்ளது.
நிதி வந்ததும் பணி
சந்திரமோகன், கவுன்சிலர் ( தி.மு.க.,) : ரூ. 4 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளது, சேதமடைந்த மெயின் ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். சென்பகனுார் விநாயகர் கோயில் சிட்டி வியூ செல்லும் சந்திப்பு பகுதியில் தடுப்புச்சுவர் , பாலம் அமைக்க முடியாத நிலை உள்ளது.
வார்டில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்கு சரியாக எரிகிறது. ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறது என்றார்.

