ADDED : செப் 06, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மதுரை மாவட்டம் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ், இந்தியன் சிலம்பப் பள்ளி இணைந்து தென் மாநில சிலம்ப போட்டியை நடத்தியது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500 க்கு மேற்பட்ட 6 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், தொடும் முறை போன்ற போட்டிகள் நடைபெற்றது . ஒற்றைக்கம்பு போட்டியில் 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கங்களை திண்டுக்கல் மாவட்ட ஒய் 2எம்ஏ அகாடமி மாணவர்கள் பெற்றனர். சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா ஒய்2எம்ஏ அகாடமியில் நடைபெற்றது. அகாடமியின் மேலாளர் யாசிப் தலைமை வகித்தார். தலைமை பயிற்சியாளர் தேவகி பிரசாத் கலந்து கொண்டார்.