ADDED : பிப் 01, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரி சுயஉதவிபிரிவு ஆங்கில துறை இளங்கலை முதலாம், இரண்டாம்ஆண்டு மாணவர்கள் சந்தை ரோட்டிலுள்ள பாரதிபுரம் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வசிக்கும் 40க்கும் மேற்பட்டமுதியோர்களுக்கு சேவை புரிந்தனர்.
மருத்துவ உதவி, முதியோர் பராமரிப்பு, மகிழ்வித்தல் நிகழ்ச்சிகள் நடத்திஉணவு, துாய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கினர். மாணவர்களின் இந்த நன்னடத்தையை கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குநர் துரைரெத்தினம், முதல்வர் பாலகுருசாமி வாழ்த்தினர். உதவி பேராசிரியர்கள் செந்தமிழ், ராபர்ட், மனோசித்ரா, நித்யா, செல்வி, சோபனாதேவி பங்கேற்றனர்.ஏற்பாடுகளை துறை தலைவர் ஆனந்தபாபு, முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்கள் செல்வன், மரியதேன், அமிர்தராஜ் செய்தனர்.