/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்சில் இடம் பிடிக்க 'ரிஸ்க்' எடுக்கும் மாணவர்கள்-
/
பஸ்சில் இடம் பிடிக்க 'ரிஸ்க்' எடுக்கும் மாணவர்கள்-
பஸ்சில் இடம் பிடிக்க 'ரிஸ்க்' எடுக்கும் மாணவர்கள்-
பஸ்சில் இடம் பிடிக்க 'ரிஸ்க்' எடுக்கும் மாணவர்கள்-
ADDED : அக் 07, 2025 04:23 AM

வடமதுரை: வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால் பஸ்களில் இடம் பிடிக்க வெகு துாரம் நடந்து சென்று முந்தைய பஸ் நிறுத்தத்தில் ஆபத்தாக காத்திருந்து பள்ளி மாணவர்கள் பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
வடமதுரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். 9 வார்டுகள் குக்கிராமங்களிலும் மீதமுள்ள 6 நகர் பகுதியிலுமாக அமைந்துள்ளன. திண்டுக்கல்லில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் இருப்பதாலும் திருச்சி மார்க்கத்தில் செல்லும் விரைவு பஸ்களின் சேவை இரவு, பகல் தொடர்ந்து கிடைக்கிறது.
இதனால் வடமதுரை நகர் திண்டுக்கல் மாநகராட்சிக்கு துணை நகர் போல்வளர்ச்சி கண்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் நாளுக்கு நாள் சிரமங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பஸ் ஸ்டாப் பகுதியில் கடை விஸ்தரிப்பு, டூவீலர்கள் ஆக்கிரமிப்பாக உள்ளதால் ரோடு குறுகலாக மக்களுக்கு இடையூறாக உள்ளது. பஸ் ஸ்டாப் பகுதியில் ரோடு விளிம்புகளிலும் டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்வோரால் பஸ் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சில கடைக்காரர்கள் தங்கள் வியாபாரம் பாதிப்பதாக கூறி ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகளை விரட்டும் கொடுமையும் நடக்கிறது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ளது.
இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பிய நிலையில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் தடைப்பட்டு நிற்கிறது. இதை விரைவுப்படுத்த மக்கள் பிரதிநிதிகள் முன் வர வேண்டும். -