/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளத்தில் ஆற்று நீரைசேமிக்க விவசாயிகள் விறுவிறு
/
குளத்தில் ஆற்று நீரைசேமிக்க விவசாயிகள் விறுவிறு
ADDED : அக் 07, 2025 04:22 AM

வடமதுரை: அய்யலுார் தும்மனிக்குளத்திற்கு வரட்டாற்று நீரை திருப்பி சேமிக்கும் நோக்கில் குளம், வாய்க்கால் பகுதிகளை சீரமைக்கும் பணி நடக்கிறது.
அய்யலுார் கோம்பை, புத்துார் மலைகளில் உருவாகும் இரு காட்டாறுகள் அய்யலுார் கெங்கையூரில் ஒன்று சேர்ந்து குரும்பபட்டி, மோர்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கின்றன. இவ்விரு ஆறுகள் ஒன்று சேரும் கெங்கையூரில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து தும்மனிக்குளத்திற்கு நீர் கொண்டு செல்லப்படும். ஆனால் தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால் இயற்கையாக நீர் செல்வதில்லை. இதனால் மழை காலத்தில் மேலும் சில அடி உயரத்திற்கு கரை எழுப்பினால் மட்டுமே குளத்திற்கு நீர் கொண்டு செல்ல முடியும். இப் பணியை 2024ல் தாமதமாக செய்ததால் குளத்திற்கு பாதியளவே நீர் கிடைத்தது. மழை காலம் துவங்கி உள்ளதால் இப்பணியை பேரூராட்சி நிர்வாகம், விவசாயிகள் இணைந்து நேற்று துவக்கினர். குளத்தில் வளர்ந்திருக்கும் முள் மரங்கள், புதர்களை இயந்திரங்களை கொண்டு அகற்றினர். வாய்க்கால் பாதையும் சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தனர்.