/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டேபிள் டென்னிசில் தங்கம் வென்ற மாணவர்கள்
/
டேபிள் டென்னிசில் தங்கம் வென்ற மாணவர்கள்
ADDED : அக் 17, 2024 06:11 AM

சின்னாளபட்டி: முதல்வர் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் சின்னாளபட்டி மாணவர்கள் பங்கேற்ற திண்டுக்கல் அணி மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றது.
முதல்வர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவிற்கான மாவட்ட போட்டிகள் செப். 10ல் திண்டுக்கல்லில் நடந்தது. சின்னாளபட்டி தேவாங்கர் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் நிரஞ்சன்குமார், ஸ்ரீநாத் முதலிடம் பெற்றனர்.
இதையடுத்து சென்னையில் நடந்த மாநில போட்டிகளில் 39 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற இருவரும் முதல் இடத்தைப் பெற்று தங்கம் வென்றனர்.
முதன்முறையாக டேபிள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட மேலாளர் ஜேம்ஸ் ஜெயபிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்களை பாராட்டினர்.

