தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்

குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்

குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்


UPDATED : நவ 27, 2026 04:20 PM

ADDED : நவ 27, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 04:20 PM ADDED : நவ 27, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மாவட்டத்தில் குறுந்தானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

குறுதானியங்களின் சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் வேளாண் துறையின் மூலம் எக்டேருக்கு ரூ.8 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரை மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் உழவு, களை எடுத்தல், தெளிப்புப்பணி, பறவை விரட்டுதல் உள்ளிட்ட இடைநிலை செயல்பாடுகளுக்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புபவர்கள் உழவர் செயலியில் பதிவு செய்து உரிய நில உடைமை, சாகுபடி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், நில விவரங்கள், கள ஆய்வு மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us