/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளைப்பொருள் ஏற்றுமதி சான்று பெற மானியம்
/
விளைப்பொருள் ஏற்றுமதி சான்று பெற மானியம்
ADDED : ஜன 25, 2025 05:10 AM
திண்டுக்கல் : விவசாயிகள் , உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக அரசு சார்பில் பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது.
மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் , வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் ,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏப். 1 ம் தேதிக்கு பிறகு இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு, பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் உரிமம் போன்றவற்றிற்கான ரசீது சமர்ப்பித்தால், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், வேளாண்மை ,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம் போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனை படி அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அரசு சார்பில் வழங்கப்படும்.
ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் , உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், திண்டுக்கல் 94420 60637 , 97872 41890, 63836 91886, 63836 39322 ல் அணுகாலம்.

