ADDED : பிப் 25, 2026 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் காலின் செல்வராணி கூறியதாவது: சமூக நலத்துறை சார்பில் கிராம ஏழைப் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உலர் மாவு அரைக்கும் வணிக ரீதியிலான கிரைண்டர் பெற 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
70 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் வருவாய் ஈட்டும் பெண்ணாகவும் இருப்பது அவசியம். அதிகபட்ச மானியம் ரூ.5 ஆயிரம் மட்டுமே. 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலக சமூக நலத்துறை அலுவலகத்தில் 0457 - 2460 092 ல் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

