/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேம்பர் கண்காணிப்பாளர் கொலையில் திடீர் திருப்பம்
/
சேம்பர் கண்காணிப்பாளர் கொலையில் திடீர் திருப்பம்
ADDED : ஆக 13, 2025 01:50 AM

பழனி: பழனி அருகே செங்கல் சேம்பர் நிறுவன கண்காணிப்பாளர், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த சரவணன்; அப்பகுதியிலுள்ள செங்கல் சேம்பரில் கண்காணிப்பாளராக வேலை செய்தார்.
இந்நிலையில், ஆக., 9 இரவு சேம்பருக்கு செல்வதாக கூறிச்சென்ற சரவணன் இறந்து கிடந்தார். சரவணனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சேம்பரில் வேலை செய்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, அவரின் தந்தையிடம் விசாரித்தனர். 17 வயது சிறுமியை காதலித்து வந்த சரவணன், அவரை பார்ப்பதற்காக ஆக., 9 இரவு சேம்பருக்கு சென்றார்.
அங்கு, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிறுமியின் தந்தை, மகள்களான 17 வயது, 14 வயது சிறுமியர் சேர்ந்து தள்ளிவிட்டதில் சரவணன் இறந்தது தெரிந்தது.
மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் சரவணனின், உடலை நேற்று காலை, 11:30 மணிக்கு அவரது உறவினர்கள் பெற்று சென்றனர்.