/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்புகளால் உருவாகும் நெரிசலால் தினமும் அவதி
/
ஆக்கிரமிப்புகளால் உருவாகும் நெரிசலால் தினமும் அவதி
ஆக்கிரமிப்புகளால் உருவாகும் நெரிசலால் தினமும் அவதி
ஆக்கிரமிப்புகளால் உருவாகும் நெரிசலால் தினமும் அவதி
ADDED : ஜன 03, 2024 06:51 AM

திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தினமும் அவதிப்படுகின்றனர். விழாக்காலங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் தலைவிரித்து ஆடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மவுனமாக இருக்கிறது. மேற்கு ரதவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகமும் சரி அதிகாரிகளும் சரி எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் நிறுத்தி லோடுகள் இறக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் ஏதாவது கேட்டால் அவ்வளவு தான் லோடு மேன்கள் சண்டைக்கு வரும் நிலையும் தொடர்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் நெரிசல் .1 கிலோ மீட்டர் துாரத்தை கடந்து வருவதற்குள் போதும் போதும் என ஆவதாக பொது மக்கள் புலம்புகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போலீசாரும் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த வேண்டும்.
...................
அகற்ற நடவடிக்கை
இந்த வாரத்தில் போலீசாரோடு இணைந்து திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .
நாராயணன்,மாநகராட்சி திட்டம் செயற்பொறியாளர்,திண்டுக்கல்.