/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாய், கொசு, மாடு, குதிரைகளால் தினம் தினம் அவதி; துயரத்தின் பிடியில் பழநி 9வது வார்டு மக்கள்
/
நாய், கொசு, மாடு, குதிரைகளால் தினம் தினம் அவதி; துயரத்தின் பிடியில் பழநி 9வது வார்டு மக்கள்
நாய், கொசு, மாடு, குதிரைகளால் தினம் தினம் அவதி; துயரத்தின் பிடியில் பழநி 9வது வார்டு மக்கள்
நாய், கொசு, மாடு, குதிரைகளால் தினம் தினம் அவதி; துயரத்தின் பிடியில் பழநி 9வது வார்டு மக்கள்
ADDED : ஜன 18, 2024 06:25 AM

பழநி : நாய்,கொசு,மாடு ,குதிரைகளால் தினம் தினம் அவதி , ஜிகா பைப் பணியால் சேதமடைந்த ரோடுகள் என்பன போன்ற பிரச்னைகளால் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
பழநி நகராட்சி பகுதியில் 9 வது வார்டு நகரின் முக்கிய பகுதியான
கிழக்கு ரத வீதி, மாரியம்மன் கோயில் சந்து, நடேசர் கோயில் தெரு, கோசல விநாயகர் கோயில் சந்து, அங்கண்ணன் தெரு, சுப்பா தெரு, தெற்கு ரத வீதி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில்
உள்ள கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதியிலும் தைப்பூசம் உள்ளிட்ட விழாக் காலங்களில் தேரோட்டம் நடைபெறும்.வெள்ளி,செவ்வாய் நாட்களில் பழநி கிராம புற பக்தர்கள் அதிக அளவில் இங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். இப்பகுதியில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். சாக்கடை கழிவுநீர் முறையாக செல்லாததால் பெரியநாயகி அம்மன் கோயில் நீர் வெளியேற முடியாமல் உள்ளது. தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. தைப்பூச பக்தர்களின் வசதிக்காக ரோடுகளை விரைவில் அமைக்க வேண்டும். குறுகிய சந்துக்கள் உள்ளதால் ரோடு சேதமடைந்து இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
தெரு நாய் தொல்லை
வினோபா, நடேசர் சன்னதி தெரு : பெரியநாயகி அம்மன் கோயில் அருகில் நடேசன் சன்னதி தெரு உள்ளது. இந்த தெரு ரோடு சேதமடைந்துள்ளது. ரோடு முழுவதும் அகற்றி அதன் பின் புதியதாக ரோடு அமைக்க வேண்டும். சாலையிலே புதிய சாலையை அமைக்க கூடாது. தெரு நாய் தொல்லையும் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
முதியவர்களுக்கு சிரமம்
முத்துக்கருப்பன், தனியார் ஊழியர், மாரியம்மன் கோயில் சந்து: அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஜிகா பைப் லைன் திட்டம் நகராட்சி சார்பில் கொண்டுவரப்பட்டது .ஆனால் எங்கள் பகுதியில் மெயின் பைப் அமைக்கப்பட்டதில் மாரியம்மன் கோயில் அருகே ரோடு சேதமடைந்துள்ளது . இப்பகுதியில் குறுகலான சந்துகளால் உள்ளதால் நடந்து வர வயது முதிர்ந்தவர்கள் சிரமம் அடைகின்றனர்.
மாடு, குதிரையால் விபத்து
சிவசுப்பிரமணியன்,தனியார் ஊழியர் கிழக்கு ரத வீதி: பழநியில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் கிழக்கு ரத வீதியிலே அதிக அளவில் நடைபெறுகிறது . பாதயாத்திரை பக்தர்கள் இவ்வழியே அதிக அளவில் கடந்து செல்வர். தேர் நிற்கும் இடத்தில் சாக்கடை, சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடை தேக்கத்தால் கொசு தொல்லை அதிகம் உள்ளது மாடு, குதிரை அதிகம் திரிவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
புஷ்பலதா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,) :நாய் தொல்லை குறித்து நகராட்சியில் பேசி உள்ளேன் கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது. தெரு விளக்கு, குடிநீர் வழங்கல் எந்தவித தடங்கல் இன்றி செயல்பட்டு வருகிறது. சாலை ,சந்து பாதைகள் சேதமடைந்துள்ளது . நகராட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. சரிசெய்ய தொடர்ந்து நகராட்சியில் கோரிக்கை வைத்து வருகிறேன் என்றார்.