ADDED : செப் 28, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சிறுநாயக்கன்பட்டியில் ரோட்டின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டில் சிறுநாயக்கன்பட்டியை கடக்க நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். பள்ளி நேரங்களில் வாகனம் சிக்கிக் கொண்டால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்த ஆயுத்தமாகி வருகின்றனர்.