நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்,: கல்வார்பட்டி தொன்னிக்கல்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 27. இவருக்கும், கரூரைச் சேர்ந்த காவியா 24 என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கோவையில் வசித்த கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல், மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த செந்தில்குமார், சொந்த ஊரான தொன்னிக்கல் பட்டி குடகனாற்றுக்கு சென்று விஷ காயை தின்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.