sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் சுக்காவளி மக்கள்

/

அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் சுக்காவளி மக்கள்

அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் சுக்காவளி மக்கள்

அடிப்படை வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் சுக்காவளி மக்கள்


ADDED : செப் 14, 2025 03:41 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் சுக்காவளி கிராமத்திற்கு முறையான ரோடு வசதி இல்லாமலும், குடிநீர் பிரச்னையாலும் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மாவட்டத்தின் எல்லை பகுதியிலும் அய்யலுார் பேரூராட்சியின் கடைசி கிராமமாகவும் இருப்பது சுக்காவளி . அய்யலுாரில் இருந்து இங்கு செல்ல பாலத்தோட்டம், கிணத்துபட்டி, களத்துபட்டி வழியே பயணிக்க வேண்டும். வனத்துறை பகுதி என்பதால் தார் ரோடாக மாறாமல் வண்டிப்பாதையாக கரடு முரடாக உள்ளது. டூவீலர்களில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பாதையை கடக்க முடியும். மற்றொரு பாதை திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் மாவட்ட எல்லைக்கு அப்பால் ஒரு கி.மீ., துாரத்தில் இருக்கும் கீரனுாரில் இருந்து ரயில்வே சுரங்கப் பாதை வழியே மற்றொரு ரயில் பாதையின் மேம்பாலம் வழியே மீனாட்சியூர் சென்று அங்கிருந்து சுக்காவளி சென்றடையலாம். இந்த ரோட்டில் திருச்சி மாவட்ட பகுதிக்குள் மீனாட்சியூர் வரை ரோடு அமைக்கப்பட்டுள்ளது. சுக்காவளியை சுற்றிலும் 3 பக்கமும் மலைகளும் ஒரு பக்கம் மட்டுமே சமவெளியாக உள்ளது. இந்த சமவெளி பகுதியும் திருச்சி மாவட்ட நிலப்பரப்புடன் இணைந்து இருப்பதால் ரோடு போக்குவரத்திற்கு அந்த மாவட்டத்தை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. 2020ல் துவங்கி சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் பிரச்னையால் அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டபோது இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தற்போதும் இங்கு குடிநீர், ரோடு, தெருவிளக்குகள் பிரச்னைகளால் மக்களின் அவதியும் தொடர்வதாக மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

-பெயர்ந்து கிடக்கிறது ஜி.ராமசந்திரன், ஒலிபெருக்கி அமைப்பாளர், சுக்காவளி: அய்யலுார் பேரூராட்சிக்குள் இருந்தாலும் திண்டுக்கல் மாவட்ட நிலப்பரப்பு வழியே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் திருச்சி மாவட்ட பகுதிக்குள் அதிக துாரம் பயணித்த அய்யலுார், திண்டுக்கல் செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியிலான ரோடும் பராமரிப்பின்றி பெயர்ந்து கிடக்கிறது. களத்துபட்டி, கிணத்துபட்டி, பாலத்தோட்டம் வழித்தடத்தின் பெரும்பகுதி வனத்துறை வசம் இருப்பதால் ரோடு திட்டம் கைகூடாமல் உள்ளது. இங்குள்ள 2 குடிநீர் தொட்டிகளில் ஒன்று சேதமடைந்து கிடக்கிறது. திருச்சி மாவட்டம் வழியே செல்லும் ரோட்டை மேம்படுத்தி தர வேண்டும். ஊரூணிகளையும் துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் தொட்டிகளை அமையுங்க கே.பெரியசாமி, அ.தி.மு.க., நகர விவசாய அணி செயலாளர், குப்பாம்பட்டி: சுக்காவளியை சுற்றியிலும் இருக்கும் மலைகளில் காட்டுமாடுகள் நடமாட்டம் உள்ளது. காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் தேடி வரும் நிலை உள்ளதால் மலை அடிவார பகுதிகளில் நீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். தெரு விளக்கு, குடிநீர் தொட்டிகள் கூடுதலாக அமைத்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும். குப்பாம்பட்டியில் இருந்து வனப்பகுதி வழியே 2.5 கி.மீ., தொலைவில் சுக்காவளி உள்ளது. முறையான தார் ரோடு வழியே செல்ல 10 கி.மீ., துாரமாகிறது.

-முழுமையாக்க நடவடிக்கை ஜி.சின்னச்சாமி, பேரூராட்சி கவுன்சிலர், குப்பாம்பட்டி: சுக்காவளி பகுதி முழுவதுமே தனியார் நிலங்களில் உருவான குடியிருப்புகளாக அதிக இடைவெளியில் வீடுகள் உள்ளது. இதனால் சிமென்ட் ரோடு அமைப்பதற்கு இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இங்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இங்குள்ள மக்கள் ஒருமித்த கருத்துடன் இடத்தை தேர்வு செய்து தந்தால் உடனே ஆழ்துளை கிணறு அமைத்து நீர்தொட்டி அமைக்க முடியும். வனப்பகுதி வழியே ரோடு அமைவதில் பல்வேறு காரணிகள் சிக்கலாக உள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்சி மாவட்டம் வழியிலான ரோட்டில் எஞ்சிய பகுதியை முழுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.-






      Dinamalar
      Follow us