/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை கால குடிநீர் - ஆய்வு கூட்டம்
/
கோடை கால குடிநீர் - ஆய்வு கூட்டம்
ADDED : மார் 10, 2024 05:30 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கமிஷ்னர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் கோவிந்தராஜ், கோட்டப்பொறியாளர் நாகராஜ், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரியப்பன் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு குடிநீர் வடிகால் வாரியம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம புறங்களில் குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டன.

