/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை'யில் இன்று துவங்குகிறது கோடை விழா , மலர் கண்காட்சி
/
' கொடை'யில் இன்று துவங்குகிறது கோடை விழா , மலர் கண்காட்சி
' கொடை'யில் இன்று துவங்குகிறது கோடை விழா , மலர் கண்காட்சி
' கொடை'யில் இன்று துவங்குகிறது கோடை விழா , மலர் கண்காட்சி
ADDED : மே 24, 2025 02:33 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் இன்று துவங்கும் கோடை விழா , மலர்கண்காட்சி ஜூன் 1 வரை 9 நாட்கள் நடக்கிறது.
சர்வதேச சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை,சுற்றுலாத்துறை சார்பில் இன்று கோடை விழாவை அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல்வம், சக்கரபாணி, ராஜேந்திரன் துவக்கி வைக்கின்றனர். காலை 11:00 மணிக்கு துவங்கும் மலர் கண்காட்சியில் காய்கறி, பழங்கள், பூக்களால் ஆன மயில்,கங்காரு ,புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு,ஆயக்குடி கொய்யா,கொடைக்கானல் மலைப்பூண்டு, ஹார்டின் செல்பி பாயின்ட், பூனை அமைப்புகள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக இடம்பெறுகின்றன.
கோடை விழா நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் நடக்கின்றன. மலர் கண்காட்சியை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பயணிகள் பார்வையிடலாம் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
கட்டணம் உயர்வு
பிரையன்ட் பூங்காவில் நடக்கும் மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர்களுக்கு ரூ. 25 என்றிருந்தது. இந்தாண்டு மலர் கண்காட்சி நடக்கும் 9 நாட்களுக்கு பெரியவர்களுக்கு ரூ.75, சிறுவர்களுக்கு ரூ. 35, கேமராவிற்கு ரூ.50, வீடியோ கேமராவிற்கு ரூ. 100 என வசூலிக்கப்படுகிறது.