/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லை குளிர்வித்த கோடை மழை
/
திண்டுக்கல்லை குளிர்வித்த கோடை மழை
ADDED : மே 08, 2025 03:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் மார்ச் துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை4 :00மணிக்கு மேல் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. 4:55 மணிக்கு மேல் பெய்த மழை விடாத கனமழையாக மாறி இடி, மின்னலுடன் பெய்தது. 30 நிமிடத்திற்கும் மேலாக பெய்த மழை திண்டுக்கல்லை குளிர்வித்தது மழையால் திருச்சி ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது .
ஆயக்குடி: கோம்பைப்பட்டி பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காற்றுடன் பெய்த மழையால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வடமதுரை : வடமதுரையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் சிறிது நேரம் மழை பெய்தது. பலத்த காற்றால் வடமதுரை காணப்பாடி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த புங்க மரம் சாய்ந்ததில் அருகில் இருந்த மின் கம்பமும் உடைந்து ரோட்டில் விழுந்தது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்தும், மின்சப்ளையும் சில மணி நேரத்திற்கு பாதித்தது.