/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
/
திண்டுக்கல் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
ADDED : நவ 08, 2024 04:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்பகுதி முருகன் கோயில்களில் பக்தர்கள் படை சூழ சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கந்தசஷ்டி விழா நவ.2ல் தொடங்கியது.
இதேபோல , ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில்உட்பட திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள முருகன் கோயில்களிலும் கடந்த 5 நாள்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று அனைத்து கோயில்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் மாலை 4:30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் தொடங்கி மாலை 6:00 க்கு நிறைவடைந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்கள் திராளாக கலந்து கொண்டு அரோகோரா கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
கொடைக்கானல் :- கொடைக்கானல் மலைப்பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இங்குள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர். குறிஞ்சியாண்டவர், வில்பட்டி வெற்றிவேலப்பர்,தாண்டிக்குடி பாலமுருகன், பண்ணைக்காடு சுப்ரமணிய சுவாமி, நாவலாசம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,பஜன் நடந்தது.
அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா நவ. 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கிரிவல பாதையில் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலர் அழகுலிங்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன் செய்திருந்தனர்.
சின்னாளபட்டி : சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.
இதையொட்டி யாக சாலை பூஜை , கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல் நடந்தது. பின்னர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.