/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்
/
பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்
ADDED : நவ 06, 2024 02:30 AM
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நாளை ( நவ., 7) மாலை நடக்கும் நிலையில் காலை 11:00 மணி முதல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அன்றிரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடைபெறாது.
பழநி முருகன் கோயிலில் நவ., 2ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாளை சூரசம்ஹாரம் நடப்பதால் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:30 மணிக்கு விளாபூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலபூஜை, மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3:10 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிகளையடுத்து கோயில் திருநடை சாத்தப்படுகிறது. இதன் பின் சுவாமி அடிவாரம் கிரிவீதி வர மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையடுத்து சுவாமி கோயிலுக்கு திரும்ப வழக்கப்படி பூஜைகளுடன் ராக்கால பூஜையும் நடக்கிறது. இதை தொடர்ந்து படிப்பாதை, வின்ச்சில் வரும் பக்தர்கள் காலை 11:00 மணி வரை மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுபோல் அன்று இரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடக்காது.
ஏழாம் நாளான நவ.,8ல் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு, மாலையில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.