sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உள்ளாட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது

/

உள்ளாட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது

உள்ளாட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது

உள்ளாட்சி கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது


ADDED : செப் 21, 2024 06:09 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நத்தம், வத்தலக்குண்டு,கொடைக்கானல்,பழநி,வேடசந்துார்,கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சிகள் கட்டுப்பாட்டில் பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அவைகள் தனியாருக்கு டெண்டர் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை நிர்வகிக்கும் நபர்கள் முறையான கட்டணச்சீட்டு பொது மக்களுக்கு வழங்காமல் தங்கள் இஷ்டத்திற்கு கூடுதலாக பணத்தை வசூலிக்கின்றனர். ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் கழிப்பறைகளை பராமரிக்கும் டெண்டர் எடுத்தவர்கள் குறைவான தொகையை கணக்கு காட்டிவிட்டு இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கொடைக்கானல்,பழநியில் தான் இப்பிரச்னை அதிகளவில் நடக்கிறது. காரணம் சுற்றுலா பயணிகள் இந்த 2 பகுதிகளிலும் குவிவதால் இதுபோன்ற முறைகேடுகளை கண்டுகொள்ள ஆள் இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் யாராவது இதுகுறித்து தட்டிக்கேட்டால் அவ்வளவு தான் உடனே அங்கிருப்பவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். தொடரும் இப்பிரச்னைகள் குறித்து எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் மவுனமாக இருக்கின்றனர். அவசரத்திற்கு கூட அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் சம்பந்தபட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us