ADDED : நவ 20, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இணையவழி பணி குறியீட்டை குறைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக நில அளவை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.
இதன் ஒருபகுதியாக திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வினோத்பாலு தலைமை வகித்தார்.
வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முபாரக் அலி, சுகந்தி, பாஸ்டின் பேசினர். மாவட்ட செயலாளர் விக்னேஷ் கலந்துகொண்டார்.

