ADDED : செப் 28, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், செப்.29-
தமிழக நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வினோத்பாலு தலைமை வகித்தார். செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, சேலம் மாவட்டங்களில் நில அளவையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். நிர்வாகிகள் ஜெசி, ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
