ADDED : செப் 28, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி, செப்.29-
திண்டுக்கல் திருமலைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஜான்ஜோசப் செல்வகுமார் 47. இவர் ஜூன் மாதம் தனது மனைவி செல்வி வேம்பார்பட்டிக்கு வந்தபோது நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக கூறி ஆவணங்களுடன் அப்பகுதி வி.ஏ.ஓ., சுப்புராஜிடம் சென்று இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். விசாரணையில் அவர் அளித்த ஆவணங்கள் போலி என தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்பு வி.ஏ.ஓ., டூவீலரில் நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்றபோது ஜான்ஜோசப் செல்வகுமார் அவரை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி, சான்றிதழ் வழங்குமாறு கேட்டு மிரட்டினார்.
தற்போது ராகலாபுரத்திற்கு பணியிட மாறுதலாகி உள்ள வி.ஏ.ஓ., சுப்புராஜ் இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப் பதிந்து ஜான்ஜோசப் செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கிறார்.
