ADDED : செப் 28, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.29-
கொடைக்கானலில் உயர்ரக போதைப் பொருள் பதுக்கிய வெளி மாநிலங்களை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் பூண்டி போலுார் பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். கேரளத்தை சேர்ந்த மனுவில்சன் 29, பெங்களூருவை சேர்ந்த நித்தின் 36, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, போதைக் காளான், எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து அனுமதியின்றி செயல்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து கொடைக்கானல் போலீசார் தேடி வருகின்றனர்.
