/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூசையப்பர் சர்ச் விழா தொடங்கியது
/
சூசையப்பர் சர்ச் விழா தொடங்கியது
ADDED : மே 06, 2025 06:36 AM

செந்துறை: நத்தம் அருகே செந்துறை சூசையப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சர்ச்சில் இருந்து தொடங்கிய கொடிபவனி நேதாஜிநகர், பாத்திமாநகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி வழியாக சர்ச் வந்தது.
இதை தொடர்ந்து புதிய குருவிற்கு செண்டை மேளம் முழங்க சிறப்பு வரவேற்பு நடந்தது. திருவிழா கூட்டுத்திருப்பலி பாதிரியார்கள் ஆரோக்கிய சார்லஸ் பென்னி, இன்னாசிமுத்து, ஜான்ஜெயபால்,பிரிட்டோ,கிறிஸ்துராஜ், ரூபன் ஞானசேகரன், மைக்கேல்ராஜ், சேவியர் தலைமையில் நடந்தது.
இதன் கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று காலை முதல் திருவிருந்து திருப்பலி, மாலையில் வேண்டுதல் பொங்கல்,புனித செபஸ்தியார் வேண்டுதல் சப்பர பவனி நடந்தது. இன்று மாலை பொதுப் பொங்கல், இரவு ஆடம்பர திருவிழாவில் பாதிரியார் ஆண்டனி கிறிஸ்டோ,அந்தோணிராஜ் இன்னாசிமுத்து தலைமையில் திருப்பலி, இரவு அன்பின் விருந்து, இன்னிசை கச்சேரி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (மே 7) அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர், செபஸ்தியார் உள்ளிட்ட புனிதர்கள் பவனி வர தேர்பவனி நடைபெறுகிறது இதை தொடர்ந்து திருப்பலி , கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.