UPDATED : ஜூலை 27, 2026 07:41 PM
ADDED : ஜூலை 27, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 21ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. மாலை 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. இரவு 9:00 மணிக்கு பூப்பல்லக்கில் திருமணக்கோலத்தில் எழுந்தருளல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
