/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க...காளை, வீரர்களுக்கு நல வாரியம்.. குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
/
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க...காளை, வீரர்களுக்கு நல வாரியம்.. குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க...காளை, வீரர்களுக்கு நல வாரியம்.. குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க...காளை, வீரர்களுக்கு நல வாரியம்.. குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
ADDED : டிச 31, 2024 05:09 AM

திண்டுக்கல்: ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க,காளை,வீரர்களுக்கு நல வாரியம் அமையுங்க,முன்னறிவிப்பின்றி வீட்டை ஜப்தி செய்றாங்க என ஏராளமானோர் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக கொண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் கோட்டைகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 277 மனுக்கள் பெறப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட மைய நுாலகத்தில் டிச.23 முதல் திருக்குறள் பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டி, ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களைப் பெற்ற முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 ரொக்க பரிசு , சான்றிதழ்கள் வழங்கபட்டது.
பழநி நெய்க்காரப்பட்டி மாரியம்மாள் கொடுத்த மனுவில், எனது மகன் ஆகாஷ் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். கடந்த மாதம் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆகாஷை ஜாதி ரீதியாக திட்டி, சக மாணவர்கள் மத்தியில் உடைகளை கலைத்து துன்புறுத்தினார். மனம் முடைந்த ஆகாஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார்,பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
விஜய் மக்கள் இயக்கம் திண்டுக்கல் கிழக்க மாவட்ட தொண்டரணி தலைமை சார்பில் வைரமுத்து என்பவர் கொடுத்த மனுவில், சின்னாளப்பட்டி கீழக்கோட்டையில் டிச.28 நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒரு பச்சிளம் பெண் குழந்தையை ஒரு பையில் வைத்து எனது வீட்டிற்கு அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் வீசி சென்றார். சின்னாளப்பட்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் போது இறந்த குழந்தையை பார்த்து சின்னாளப்பட்டி பேரூராட்சியில் சுகாதார பிரிவுக்கு தகவல் தெரிவிக்க சடலத்தை பேரூராட்சிக்கு குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்தனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. குழந்தை எப்படி இறந்தது, யார் வீசினார்கள் என தெரியவில்லை. இது சம்பந்தமாக அம்பாத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை எனக்குறிப்பிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாநில தலைவர் ஒண்டி ராஜன், மாவட்டத் தலைவர் சின்னையா ஆகியோர் கொடுத்த மனுவில்,திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கும்,மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கப்படுகிறது.
அம்முறையை ரத்து செய்து கால்நடை பராமரிப்பு துறை முத்திரை உடைய டோக்கன்களை விழா நடத்தும் கமிட்டியாளர்கள் மூலம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பி போடச் சொல்வது இயலாத காரியமாகும். 80 ஊர்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு,மாடுபிடி வீரர்கள் ஆகியோருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி: ரெட்டியார்சத்திரத்தையடுத்த ஸ்ரீராமபுரம் போளியமனுார் பகுதியைச் சேர்ந்த முனியப்பன், இவரது மனைவி கலைவாணி 31 ஆகியோர், தங்களது 3 வயது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது பெட்ரோல் ஊற்றி கலைவாணி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நடத்திய விசாரணையில், தெருக் குழாயில் வரும் தண்ணீரை, அக்கம் பக்கத்தினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் எங்கள் வீட்டின் அருகே தண்ணீர் தேங்கி நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி திருமலைராஜன் என்பவரது மனைவி ஐஸ்வர்யா 30. இவர் தனது தாயார், 2 குழந்தைகள், கணவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
விசாரணையில் 2013ல் தனியார் வீட்டுக் கடன் நிறுவனத்தில் ரூ.34.5 லட்சம் கடன் பெற்றோம். கொரோனா காலத்தில் மட்டும் 3 மாதங்கள் தவணையை செலுத்தவில்லை. ரூ.46 லட்சம் வரை செலுத்திய நிலையில், மேலும் ரூ.40 லட்சம் செலுத்த வேண்டும் என தனியார் நிறுவனம் வலியுறுத்தியது.
பேச்சுவார்த்தையில் ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.46 லட்சம் போக மேலும் ரூ.18 லட்சத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.18 லட்சத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.64 லட்சம் செலுத்தினோம். ஆனாலும் வீட்டின் ஆவணங்களை தனியார் நிறுவனம் திருப்பித் தரவில்லை. 5 மாதங்களுக்கு முன், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வீட்டை ஜப்தி செய்தனர் என்றனர்.