/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழ் மொழி இனி உலகை ஆளும் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
/
தமிழ் மொழி இனி உலகை ஆளும் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
தமிழ் மொழி இனி உலகை ஆளும் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
தமிழ் மொழி இனி உலகை ஆளும் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ADDED : பிப் 20, 2025 05:49 AM

செம்பட்டி: ''தமிழ் மொழி இனி உலகை ஆளும்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
எஸ்.பாறைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தும், ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தும் அவர் பேசியதாவது: கிராம மாணவர்களின் நலன்,பாதுகாப்பில் திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது.
1965 முதல் தற்போது வரை தமிழகத்தின் தாய் மொழியான தமிழை ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஹிந்தி நமக்கு தேவையில்லை. எந்த மாநிலமும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது. அதனை விரும்பி படிப்பவர்களை தடுக்கவில்லை. கட்டாயப்படுத்த கூடாது. நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்களை குறை இல்லாமல் செயல்படுத்தி வருகிறோம். தமிழ் மொழி இனி உலகை ஆளும் என்றார். திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். பி.டிஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள் கலாவதி பங்கேற்றனர்.