/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 05, 2025 03:05 AM

கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதி கள்ளிமந்தையத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை மாவட்ட செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்து கூறி உறுப்பினர்களை சேர்த்தனர்.
புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஒன்றியச் செயலாளர் தங்கம், பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தினேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதி முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
சின்னாளபட்டி : தி.மு க., சார்பில் சின்னாளபட்டியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார்.
வீடுவீடாக உறுப்பினர் விபரங்களை சரிபார்த்து ஆதார் எண், பெயர், அலைபேசி உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் பிரதீபா பங்கேற்றனர்.