ADDED : செப் 28, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் காணொலி காட்சி மூலம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கல்லுாரி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர்கள் ரவிசங்கர், ரமேஷ், வாசுகி கலந்து கொண்டனர்.