ADDED : செப் 26, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: தமிழர்தேசம் கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ். செல்வக்குமாரை ரவுடி என சித்தரித்து அவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி திருச்சி மாநகர போலீஸ் சோதனை நடத்தியதை கண்டித்து நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு தமிழர்தேசம் கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பிரபுஅம்பலம், இணைச் செயலாளர் அழகுராஜா, துணை செயலாளர் வெள்ளிமலை முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் பிரபு, பொன்னுச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

