/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
/
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
தடுமாற வைக்கும் தார் ரோடுகள்; இல்லவே இல்லை வடிகால் அல்லாடும் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள்
ADDED : ஜூன் 01, 2025 12:17 AM

ஒட்டன்சத்திரம்,:சேதத்தால் தடுமாற வைக்கும் ரோடுகள்,இல்லவே இல்லை வடிகால் வசதி என்பன போன்ற பிரச்னைகளுடன் ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
அரசப்ப பிள்ளைபட்டி ஊராட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றிய நிலையில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியவையும் நிறையவே உள்ளன . தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் இதற்கு தட்டுப்பாடு இல்லை. குப்பை தினமும் அள்ளி அப்புறப்படுத்தப்படுகிறது. புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சேரன் நகர் பகுதியில் உள்ள தெருக்கள் சேதமடைந்து வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கின்றன. விரிவாக்கப் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இங்கு தேவையை கருதி விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் வடிகால் வசதி இல்லாமல் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
பெரியசாமி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் : இந்திராநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. 2024ல் புதுப்பிக்கப்பட்ட அரசப்பபிள்ளைபட்டி -சாமியார்புதுார் தார்ரோடு பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
தெருக்களில் சாக்கடைகள் துார் வார தாமதம் ஆவதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. மயானத்திற்கு சுற்று சுவர் இல்லாமலும் உள்ளது.
சேதமடைந்த ரோடால் சிரமம்
பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் : அரசப்பபிள்ளைபட்டியில் இருந்து அத்தப்பகவுண்டனுார் செல்லும் தார் ரோடு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. ரோட்டின் பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறி விட்டதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.ரோடுகளில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
தேவை வடிகால் வசதி
தமிழரசி, கூலித் தொழிலாளி, சேரன் நகர் : சேரன் நகர் பகுதியில் சாக்கடை ,வடிகால்வசதி இல்லாமல் உள்ளது. இங்கு சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தெரு ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகளும் மேலாகி விட்டதால் குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலை 5:00 மணியுடன் டவுன் பஸ் சேவை நிறுத்தப்படுகிறது. இதனை நீட்டிப்புச் செய்ய வேண்டும்.