ADDED : ஜன 09, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ.ஐ.டி.யு., சங்க மாவட்ட ஆயத்த மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பெரியசாமி, செயலாளர் மணிகண்டன், பொதுச்செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சரிவர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி பிப்.11ல் சென்னை தலைமைச் செயலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

