/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: டாஸ்மார்க் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் பணியை பணியாளர்கள் மீது கூடுதலாக திணிப்பதை கைவிட்டு மாற்று வழியில் தனியார் முகமை மூலம் காலி மது பாட்டில்களை டாஸ்மார்க் நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ,திண்டுக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக 50க்கு மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் காலி மது பாட்டில்களை கழுத்தில் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணையன், சத்தியமூர்த்தி, மணிகண்டன், கோபால், சீனிவாசன், மகாமுனி, மூர்த்திராஜ், ராமு, சிவஜோதி முன்னிலை வகித்தனர்.

