/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 09:42 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக்கில் 23 ஆண்டு கால பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்கள் போல அனைத்து சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சீனிவாசன்,ஏ.ஐ.சி.சி.டி.யு., சங்க மாவட்ட கவுன்சில் நிர்வாகி பொன்னுத்துரை முன்னிலை வகித்தனர்.
மாநில குழு உறுப்பினர் கோபால் பேசினார். நிர்வாகிகள் சுபாஷ் சந்திர போஸ், ரவி, ராமு உட்பட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகி திருமுருகன் நன்றி கூறினார்.

