ADDED : பிப் 17, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கலை கல்லுாரியில் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி தேர்வாணையர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். முதல்வர் சரவணன் பேசினார்.
கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். காந்தி கிராமிய பல்கலை சிறப்பு வள மேலாளர் ஜாகிதா பேகம் பேசினார். கல்லுாரி துணை முதல்வர்கள் பொன்னையா ,நடராஜன், ஆலோசகர் ராமசாமி, நிதி ஆளுகையர் சிவராஜன், மூத்த பேராசிரியர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தினர் செய்தனர்.

